பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு

போலியான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles