பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் டிசம்பர் முதலாம் திகதி சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவை தெரிவு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.
இதன்போது சங்கத்தின் புதிய தலைவராக நிலந்த மதுராவல தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை புதிய செயலாளராக பிரபாத் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.
அத்துடன் உப தலைவர்களாக நல்லுசாமி ஜெயகாந்தன், யொஹான் பெரேரா, அசங்க திலகரட்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.எம். வசீம், லோரன்ஸ் செல்வநாயகம், கசுன் சமரவீர, அனுராதா ஹேரத், தினேஸ் சமரகோன், அஜித் சிறிவர்தன, குமுது வஜிர ஆகியோர் நியமிக்கப்பட்டனர்










