9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
முதலாவது சபை அமர்வு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது சபாநாயகர் பதவிக்காக மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.
அத்துடன், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சிலம்பலாபிட்டியவும், குழுக்களின் பிரதி தவிசாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச ஏற்றுக்கொள்ளப்பட்டார். சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவின் பெயரும், ஆளுங்கட்சி கொறடாவாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
கட்சி தலைவர்களின் உரை, சபாநாயகரின் நன்றி உரை ஆகியன முடிவடைந்த பின்னர் சபை இன்று மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.