ராஜபக்சக்களின் உறவினரான உதித்த லொக்கு பண்டார விரைவில் பாராளுமன்றம் வரவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்காக பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினரொருவர் பதவி துறக்கவுள்ளார் எனவும், அவர் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் எனவும் அரச உயர்மட்ட பிரமுகர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் தகவல் வெளியிட்டார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார விருப்பு வாக்கு பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கின்றார். எனினும், மொட்டு கட்சிக்கு 6 ஆசனங்களே கிடைக்கப்பெற்றன. எனவே, எம்.பியொருவர் பதவி துறந்தால் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவருக்கு சபைக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டும்.
ஊவா உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம் அதற்கான நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.