கிளிநொச்சியில் பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஏ – 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டைப் பாலத்துக்கு அடியில் இருந்து ஒன்றாக இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டுக் காணப்படும் நிலையில், அங்கு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் இருந்து தலைக்கவசம் இரண்டும், பயணப் பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் விபத்தால் உயிரிழந்தவர்களது சடலங்களா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலங்கள் நீதிவானின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
