பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளது எனவும், நாகோட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதேபோல மக்கள் சேவைமூலம் அனைவரது ஆதரவையும் பெற்ற அரசியல்வாதியாவார்.

 

 

Related Articles

Latest Articles