பிரதமரின் இல்லம் தீ வைப்பு – குவியும் கண்டனங்கள்! மூவர் கைது!

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் நேற்று மாலை தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வகையான வன்முறைகளையும் மன்னிக்கக் கூடாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் என்பன கண்டனம் வெளியிட்டுள்ளன

இந்த சம்பவம் இடம்பெற்றபோது ஒரு பெரிய கும்பல் பொலிஸ் மற்றும் படையினருடன் மோதிய சம்பவமும் பதிவாகியிருந்தது.

அதே நேரத்தில் பொலிஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

இதையடுத்து, வீட்டின் சுவர்களை தாண்டியும் தடுப்புகளை உடைத்தும் உள்ளே சென்ற ஒரு சிலர் , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.

அதேவேளை, தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles