பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பு – கைதான மூவருக்கும் மறியல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரும், எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்டிருந்தது.

கல்கிஸ்ஸ, காலி மற்றும் ஜா-எல பகுதிகளை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

Related Articles

Latest Articles