பிரபல பொப் பாடகி ஷகீராவுக்கு அவரது சொந்த ஊரான பரன்குவிலரஸில் 21 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
சிலையான சகீராவை பார்க்க கொலம்பியாவின் பரன்குவிலரஸ் பகுதிக்கு அவரது ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
இந்த சிலை ஷகீராவின் தந்தை, தாய் மற்றும் பரன்குவிலரஸ் மேயர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது.
பொப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் 45 வயதான ஷகீரா, பாடகி மற்றுமன்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
2010 ஆம் ஆண்டு உலக கோப்பை கால் பந்தாட்ட போட்டியில் இவர் பாடிய ‘ஷாமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா” என்ற பாடல் உலகம் முழுவதும் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்ததுடன் ஷகீராவை உலகறிய செய்தது.