பிளாஸ்டிக் தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, ஜூன் 1ஆம் திகதி முதல் நாட்டில் பல வகையான பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உள்ளூர் உபயோகத்தை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் கரண்டிகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள், கப் (யோகட் கப் தவிர), கரண்டி, முட்கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் தயிர் கரண்டி உள்ளிட்ட பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை விதிக்கப்படும்.

Related Articles

Latest Articles