தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று (11) மீள பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.
