புறக்கோட்டை தீ விபத்து – தலவாக்கலை யுவதி உயிரிழப்பு!

கொழும்பு, புறக்கோட்டை 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த யுவதியொருவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை, வட்டகொடை கீழ் பிரிவை சேர்ந்த விஜயம் கயாந்தி (வயது – 22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த ஆடையகத்தில் கடந்த 27 ஆம் திகதி காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கடும் புகையால் சுவாசக்கோளாறு மற்றும் எரிகாயங்களுக்கு உள்ளான 23 பேர்வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

தகவல் – வட்டகொடை தினேஷ் 

 

Related Articles

Latest Articles