புலிகளின் ஆயுதம் குறித்து அர்ச்சுனா சர்ச்சை கருத்து: யாழிலிருந்து சபைக்கு வந்தது வைத்தியரா, பைத்தியமா?

“ தாய்லாந்தில் இருந்த புலிகளின் ஆயுதம் , கே.பி. ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.”- என்று தேசிய    மக்கள்  சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டு பொய் சொல்லாமல், துணிவிருந்தால் இந்த கருத்தை வெளியில் வந்து கூறட்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி.,

“ துறைமுகத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில்  சர்ச்சை எழுந்தது. இது தொடர்பில் நான் தகவல்களை கூறினால் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம். ஏனெனில் எனக்கு  பாதுகாப்பு இல்லை. எனினும், அதனைசொல்லியாக வேண்டும்.

தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார். டயஸ்போராக்களை சந்தித்து உறுதிமொழியும் வழங்கி இருந்தார். டயஸ்போராக்கள் பணமும் வழங்கியுள்ளனர்.” என குறிப்பிட்டார்.

தாய்லாந்தில் இருந்த கொள்கலன்களில் எமது பிரபாகரனின் பொருட்களே (ஆயுதங்கள்) இருந்தன. 2009 இற்கு முன்னர் கொண்டுவருவதற்கு பிரபாகரனின் முயற்சித்த – தாய்லாந்தில் எஞ்சி இருந்த பொருட்களே (ஆயுதங்களே) கே.பி. ஊடாக இங்கு கொண்டவரப்பட்டுள்ளன என மக்கள் கதைக்கின்றனர்.

ஆயுதம் உள்ளிட்ட பொருட்களே கொள்கலன்களின் வந்தன என்று எனக்கு டயஸ்போராக்கள் தெரிவித்தனர். இதனை என்னால் நிரூபிக்க முடியாது. எனினும் பொறுப்புடனேயே கூறுகின்றேன்.” – என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார் அர்ச்சுனா எம்.பி.

அவரின் உரையை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர,

” தேசிய மக்கள் சக்தி தொடர்பில் போலியான தகவல்களை வெளியிடுகின்றார்.  பைத்தியக்காரர்கள் உளறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.  அங்கொட வைத்தியசாலைக்குதான் இந்த உளநோயாளியை அனுப்ப வேண்டும். வைத்தியர் என நினைத்து பைத்தியக்காரனை தவறுதலாக சபைக்கு அனுப்பியுள்ளனர்.” – என்று பதிலடி கொடுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles