புஷ்வானமாகிய ஹர்த்தால்: அரசு சாட்டையடி!

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் புஷ்வானமாகியுள்ளது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

” வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் சபையில் பேசப்பட்டது. அது புஷ்வானமாகிவிட்டது. எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எமது மரியாதையை, கௌரவத்தை இத்தருணத்தில் செலுத்துகின்றோம்.

நாட்டு மக்கள் இனவாத அரசியலை நிராகரித்துள்ளனர். கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலின்போது இது நிரூபமானது.

வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் இனவாதத்துக்கு இடமில்லை என்ற செய்தியை மீண்டும் வழங்கியுள்ளனர். தமது இருப்புக்காக சுமந்திரனும் இனவாத அரசியல் நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார்.” – எனவும் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

Related Articles

Latest Articles