பெண் பொலிஸாரிடம் சேட்டை விட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுடன் பாலியல் சேட்டை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான சார்ஜன்ட் ஆரம்பகட்டமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து வேறு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்டின் பாலியல் சேட்டைகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles