” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான காணி உரிமை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் 10 பேர்ச்சஸ் காணியை அவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கான காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.” – எனவும் அமைச்சர் கூறினார்.
