பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகோரி சபையில் பிரேரணை முன்வைப்பு – முகவரி இல்லாததால் ஏற்படும் அவலங்கள் பற்றியும் எடுத்துரைப்பு

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய – ஏற்புடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” லயன் வீடுகளில் வாழ்பவர்கள் வேலைதேடி விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தால், அதற்கு பதில் கடிதம் வரும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தோட்டத்தில் தொழில் செய்யவில்லையெனில் கடிதம் வழங்கப்படுவதில்லை. இதனால் தொழில் வாய்ப்புகளை இழந்தோர் ஏராளம்.

சிலவேளை அப்பகுதியில் உள்ள கடையொன்றின் முகவரி வழங்கப்பட்டிருக்கலாம். கடை முதலாளிக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் முரண்பாடுஎனில் அவரும் கடிதத்தை கையளிக்கமாட்டார்.
200 வருடங்களாகவே அம்மக்களுக்கு அப்படியான அவலநிலை தொடர்கின்றது.

15 – 10 அடி லயன் காம்பராவில் நான்கு தறைமுறைகள் வாழ்ந்துவிட்டன. ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால்கூட நிர்வாகத்தின் அனுமதி தேவை. முகவரி இல்லாததால் தோட்டத்துக்குள் கடையொன்றைபோட்டு சுயதொழிலை முன்னெடுக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, பெருந்தோட்ட நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.குறைந்தபட்சம் முகவரியையாவது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles