பெலியத்த படுகொலை- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

பெலியத்த பகுதியில் அரசியல் கட்சி தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளது.

ஒன்லைன் ஊடாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிழல் உலக தாதா கொஸ்கொட சுஜி இத்தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கொல்கொட சுஜியுடன் தொடர்பில் உள்ள குற்றவாளிகள் தொடர்பான பெயர் பட்டியலை பதில் பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளார்.
அத்துடன், நேர்த்தியான முறையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படைகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே மோதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
பெலியத்த அதிவேக நுழைவாயிலுக்கு அருகில், துப்பாக்கிச்சூடு நடத்தி ஐவரை கொலை செய்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற காட்சிகள் அருகிலிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.
மாத்தறை – கம்புருபிட்டியவில் ஜீப்பில் இருந்து ஒருவர் இறங்கும் சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த காணொளிகளை தொலைபேசி பகுப்பாய்விற்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (22) முன்தினம் காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தனர்.

 

Related Articles

Latest Articles