பாண் தவிர ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலேயே, விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
