பேசி பேசியே கொல்கிறார் மலையக அமைச்சர் – தொண்டமானின் ஆன்மாவும் அழுகிறது!

“ பொய், பித்தலாட்டம் பேசுகின்ற மலையக அமைச்சரின் நடத்தை கண்டு, எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மாதான் அழுகின்றது. அதுதான் உண்மை.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய மனோ கணேசன் இது தொடர்பில் கூறியதாவது,

“இந்த சபையில் நான் நேற்று இல்லாதபோது ஒரு மலையக அமைச்சர் என்னை பற்றி பொய், பித்தலாட்டம் நிறைந்த உரையை ஆற்றிவிட்டு சென்றுவிட்டார். அவருக்கு பதில் சொல்வது எனக்கு இழுக்கு என நினைக்கின்றேன். இருந்தாலும்கூட நாட்டுக்கும், சமூகத்துக்கும் உண்மை தெரிய வரவேண்டும் என்பதற்காக ஒன்றை கூற விரும்புகின்றேன்.

2017 இல் எமது அரசாங்கத்தின் காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்கள் கேட்டு பெற்றுக்கொண்ட 10 ஆயிரம் பெருந்தோட்ட வீடுகளுக்கான உறுதிமொழி ஐந்து வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம் என்றே நான் கூறி இருந்தேன். இப்படி இருந்தும் மனோ கணேசன் கூறுவதைக்கேட்டு பிள்ளையாரே அழுவார் என அந்த அமைச்சர் கூறுகின்றார். நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி பொய்யுரைக்கின்றார். பேசி, பேசியே கொல்கின்றார். பேசுவதைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை.

பிள்ளையார் அழமாட்டார், பிள்ளையார் என்றால் யார் கணேசன், அந்த பெரிய பிள்ளையார் கூறுவதைத்தான் இந்த சின்ன பிள்ளையார் செய்கின்றார் என்று பிள்ளையார் மகிழ்ச்சியடைகின்றார். இதுவே உண்மை.” – என்றார்.

( மனோ கணேசன், ஜீவன் தொண்டமானின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் மலையக அமைச்சர் என விளித்திருந்தார்.)

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles