பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார் மனோ!

” சரத் பொன்சேகாவுக்கு இரண்டொரு தினங்களில் உரிய பதிலை வழங்குவேன்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது.” – என்று சரத் பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் இன்று முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு,

” சரத் பொன்சேகா MP, என்னை பற்றி நேற்று சபையில் நானில்லாத வேளையில், “பேசி”யுள்ளார் என்பது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மரக்கொத்தி, மரம் மரமாக கொத்தி விட்டு, கடைசியில் வாழை மரத்துக்கு “குத்தி” மாட்டிக்கொள்ளுமாம். அதுபோல், இவர் என்னிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

நான் அரசியல் “பொடியன்” அல்ல, அவரைவிட “சீனியர்” என்ற அடிப்படையில், அவருக்கு உரிய பதிலை, “சிங்கள பெளத்த வாக்குகள் எமக்கு தேவை, ஆனால் அது தமிழ், முஸ்லிம் வாக்குகளை இழந்து, இனவாதம் பேசி பெற முடியாது” என சிங்கள மொழியில், அவருக்கு புரியும் முகமாக இரண்டொரு தினங்களில், நான் பகிரங்கமாக தருவேன்.

இது பற்றி சற்று முன் ஐமச தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் விளக்கி கூறியுள்ளேன்.

பொறுத்திருங்கள்..!” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles