அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளைப் பகுதியில் வைத்தே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினவால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அரச வளத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, தேர்தல் சட்டத்தைமீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் தலைமறைவானார், கடந்த ஐந்து நாட்களாக கொழும்பு, மன்னார் மற்றும் கிழக்கில் பல பகுதிகளிலும் தேடுதல்கள் நடைபெற்றன. 6 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே இன்று 6 ஆம் நாள் காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.










