போகாவத்தையில் மகா சித்தர்கள் யாகம்!

எதிர்வரும் பௌர்னமி தினத்தன்று (17/03/2022) போகர், இராவணேஷ்வரர் மற்றும் நவநாதர் சித்தர் தவம் செய்த “போகா வத்தை” தோட்டத்தில் மலை அடிவாரத்தில் அமையப்பெற்ற “ஸ்ரீ சீரடீ சாய் நாதா மிசன்” ஆச்சிரமத்தில் மகா சித்தர்கள் யாகம் இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஆச்சிரமத்தின் இயக்குநரும் , சித்தர்பீடத்தின் சீடர் “சாய் பாபாஜீ ஜெயகிருஷ்னா ” சுவாமிகள் இந்த பூஜைகளை சாய் பக்தர்கள் சகிதம் ஏற்பாடு செய்கிறார்.

பிரம்மரிஷி மலை இளம் சித்தர் தவசிநாதர் சுவாமிகளின் ஆசியை பெற்று, பல விசேட மூலிகைகளையும் இந்த யாகத்தில் சேர்ப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.

பக்தர்கள் அனைவரும் பௌர்னமி தினத்தன்று இவ் யாகத்தில் கலந்துகொண்டு பின்பு இடம்பெறும் அன்னதானம் நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் என்றும் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles