போதைப்பொருட்கள், துப்பாக்கிகளுடன் 6 பேர் மாட்டினர்!

பல்வேறு இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு, முகத்துவாரம் பகுதியில், 5 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயினுடன்  38 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பொரளை – கோதமிபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, முகத்துவாரம் – டவலசிங்காராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கம்பஹா, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனட்டியன பிரதேசத்தில் 560 லீற்றர் மதுபானத்துடன் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குருநாகல், பொல்காஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நாரம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல், திவுல்கஹகொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கி, கட்டுத்துவக்கு, தோட்டாக்கள் என்பவற்றுடன் குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles