” போராட்டங்களை தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பின் அனுமதியை இனி குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்கு முன்னராவது பெற வேண்டும்.” – என்று பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சால் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மக்களின் போராடும் உரிமையை நாம் ஏற்கின்றோம். அதற்கு தடை இல்லை. ஆனால் அனுமதி பெறப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான போராட்டங்களையே பாதுகாப்பு தரப்பு கட்டுப்படுத்தும்.
அதேபோல உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நாளாந்த பணியை முன்னெடுக்க தடை ஏதும் இல்லை. ” – என்றும் அவர் கூறினார்.
