போர் காலத்தில் புலிகளே மக்களை கொன்றனர்: படையினர் அவ்வாறு செய்யவில்லை!

” போர்காலத்தில் புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களை கொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.” என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘போர் காலத்தில் நீலம் திருச்செல்வம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

கொழும்பில் கொலைசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களுள் பெரும்பாலானவர்களை புலிகளே கொன்றனர். துரையப்பாவை கொன்றதும் புலிகள்தான்.

யாழில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அனுமதிக்காத – சமாதானத்தை கோரிய மக்களை கொன்றதும் அவர்கள்தான்.
அரசியல் இலாபத்துக்காக அதை (செம்மணியை) பயன்படுத்தக்கூடும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாடாளுமன்றம் வந்தார். இராணுவத்தக்கு எதிராக கூட்டமைப்பினர் மற்றும் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாமல் அதனை மறுத்தார். ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை. இது தவறாகும்.” – என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles