போர் பதற்றம்: அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை!

போர் பதற்றம்: அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

இது சட்டவிரோத நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியது. இந்த நடவடிக்கை காரணமாக தங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக தெரிவித்தது.

மேலும், இந்தியாவின் நடவடிக்கை குறித்து உலக அமைப்பை அணுக உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்த சூழலில் தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது.

Related Articles

Latest Articles