ப்ளோரிடா பல்கலை வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகம் சர்வதேச புகழ் பெற்ற கல்வி நிலையமாக அறியப்படுகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் 42,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்நிலையில் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles