உலகின் மிக பெரிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்வு நாளை 13 ஆம் திகதி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆரம்பமாகின்றது.
இந்த மகா கும்பமேளா விழா, எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதிவரை கோலாகலமாக நடைபெறும்.
45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளனர். இதற்காக கங்கா, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக பக்தர்கள், கலாச்சார விரும்பிகள், துறவிகள் நாள்தோறும் பிரயாக்ராஜ் நகருக்கு படையெடுத்து வருகின்றனர். இதுவரை லட்சக்கணக்கான பேர் அங்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.