மக்கள் மத்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்!

வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

” மக்கள் மத்தியில் இருக்கின்ற இரா ணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையாகவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாகத்தான் நான் அறிகிறேன்.ஒரு சில அரசியல் கட்சிகூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது. இதை ஓர் அடையாள எதிர்ப்பாகச் செய்துள்ளோம். கிளிநொச்சி நகரத்தில் உள்ளஇராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்க ளுக்கும் ஆதரவு கொடுப்போம்.” – எனவும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles