கடும் மழை காரணமாக இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை எல்ல – வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
மழையினால் கரந்தகொள்ள மலித்தகொல்ல இடத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, அந்த வீதியை தவிர்த்து எல்ல பல்லகெடுவ ஊடாக பசறை வீதி மற்றும் வெல்லவாய கொஸ்லந்த வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு எல்ல பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்
ராமு தனராஜா
