மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய்! வலப்பனையில் போராட்டம்!!

நுவரெலியா, வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் இன்று (01.12.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நில்தண்டாஹின்னா நகரில் ஏற்கனவே மதுபானசாலையொன்று உள்ள நிலையில், மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் சமூக நெருக்கடி – பிரச்சினைகள் உருவாகலாம் எனவும், இளைய சமூதாயம் சீரழிக்கப்படலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த நகரத்துக்கு பல அத்தியாவசிய விடயங்கள் தேவைப்படும் நிலையில் எதற்காக மதுபானசாலை திறப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பும், மக்கள், அந்த அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இப்போராட்டத்தால் நில்தண்டாஹின்னா நகரின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles