மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, மதுபான நிலையங்களுக்கு முன்னால் மது பிரியர்கள் இன்று அலைமோதினர்.
ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள், சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க திரண்டனர்.
ஹட்டன் நகரிலும் இவ்வாறானதொரு நிலைமையே காணப்பட்டது.
க.கிஷாந்தன்