மதுபோதையில் சாரதி – 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்! தலவாக்கலையில் விபத்து (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

நுவரெலியாவிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles