மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் எப்போது? அரவிந்தகுமாராவது நடவடிக்கை எடுப்பாரா?

இரண்டு வருடகால கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தும், இதுவரையிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும், மத்திய மாகாணத்தில் உள்ள 31 உதவி ஆசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பட்டுள்ளது.

” உதவி ஆசிரியர்களாகிய எமக்கு மாதம் பத்தாயிரம் ரூபாவே சம்பளம் வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அதை வைத்து என்ன செய்வது, வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

மத்திய மாகாணத்தில் மட்டும் நிரந்தர நியமனத்தில் இழுபறி நீடிக்கின்றது. வலய கல்வி பணிமனை, மாகாண கல்வி அமைச்சி வரை சென்று பலமுறை எமது முறைபாட்டினை பதிவு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என உதவி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில், மத்திய மாகாணத்தில் உள்ள 31 உதவி ஆசியர்கள் தமது நியமனம் தொடர்பில் தீர்வினை பெற்று தருமாறுகோரி கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

பொகவந்தலாவை நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles