மனோ கொள்கைவாதி – இ.தொ.கா. சந்தர்ப்பவாதி! சுமந்திரன் விளாசல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்படப் போகிறார் எனத் தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறி வித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

” மற்றைய கட்சிகளை நான் பெரிதும் விமர்சிப்பது கிடையாது. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்பட போகிறார் எனத் தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித் துள்ளனர்.

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அமைச்சுப் பதவிக்காக ஒட்டிக்கொண்டிருந்தவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

மஹிந்த ராஜபக்ச பலமாக இருந்தி ருந்தால் ஜீவன் தொண்டமானின் வாயி லிருந்து அந்த வார்த்தை வந்திருக்குமா என்பது தொடர்பில் எனக்கு பாரிய சந்தேகம் உள்ளது. அது அவர்களது அரசியல்.அதிகாரத்துக்கு பின்னாலும் சலுகைக்குப் பின்னாலும் செல்வது சிலருக்கு வாடிக்கையாகிப்போய்விட்டது.

மனோ கணேசன் இந்த விடயத்திலே மிகவும் பொறுப் பானவராக ஒரு கொள்கைப் பிடிப்போடு இருப்பவர். அதிகாரத்துக்கு பின்னாலோ அமைச்சுப் பதவிக்கு பின்னாலோ சலு கைக்காகவோ சென்றவர் அல்லர். இந்த விடயத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாட்டோடு பயணிக்க கூடிய ஒருவராக அவரை நாங்கள்அறிகிறோம். ஒருசிலர் அங்கேயும் இங்கேயுமாக இருக்கிறார்கள். இது பாரிய
நுணுக்கமான கலை. – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles