மனோவின் கருத்து பிற்போக்குத் தனமானது – செந்தில் தொண்டமான் பதிலடி

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்ற கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரி பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்க வாக்குறுதியின்படி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை :

” நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவை அனைத்து நிறைவேற்றப்படவில்லை. அப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியேறியதா என்பதைக் கேட்கவிரும்புகிறேன். தற்போது ஆயிரம் ரூபாவைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பெரும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தில் தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே அங்கம் வகிக்கிறது. இதன்போது மக்களன் குறைகளையும், தேவைகளையும் அரசாங்கத்திடம் நேடியாக எடுத்துச் சென்று அவற்றைப் பூர்த்தி செய்யும் பொறுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை அரசாங்கத்தை விட்டு வெளியேறச் சொல்வது பொறுப்பான அரசியல்வாதி கூறும் பதிலாக இருக்காது. எதிர்க்கட்சியில் இருப்பதைவிட ஆளும் கட்சியில் இருந்தால் மட்டுமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை நீண்ட அரசியல் அனுபவம் உள்ள கௌரவ மனோ கணேசனுக்கு புரியும்.

தற்போதைய அரசாங்கம் ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூற முடியாது. அமைச்சரவையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சம்பள நிர்ணய சபைக்கு இதனை எடுத்துச் செல்ல அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் அமைச்சருடன் 20இற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கவில்லை எனில், முற்போக்குக் கூட்டணித் தலைவர் கௌரவ மனோ கணேசனின் கருத்து குறித்து சிந்திக்கக் கூடியதாக இருக்கும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் பட்சத்தில் நாளை தங்களால் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க மாற்று வழி இருக்குமாயின் அதனை முன்வைக்க வேண்டும்.

ஆளும் கட்சியில் இருந்து இதனை செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சியில் இருந்து எதனையும் செய்துவிட முடியாது. எனவே, ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க பக்க பலமாக இருக்க வேண்டுமே தவிர அதனைப் பலவீனப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. ‘ என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவருமான செந்தல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles