ஹட்டன் நுவரெலியா பிராதன பாதையின் லோகி விநாயகர் கோயிலுக்கு அருகில் இருந்த ஆலமரம் முறிந்துவிழுந்ததில், வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த கோயிலுக்கு அருகில் இருந்து ஆலமரம் பகுதி பகுதியாக வெட்டி நீக்கும் பணிகள் நடந்துள்ளன. இவ்வாறு மரத்தை வெட்டும் பணிகள் பூர்த்தியாகாத நிலையில், இயந்திரங்கள் அங்கே இருந்த போதிலும், எவரும் அந்த இடத்தில் இருக்கவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 35 வயதுடைய தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மகேஸ்வரன் என்ற ஆசிரியரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மரம் முறிந்துவிழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
லிந்துலை – தலவாக்கலை பொலிசார் தனித்தனியே விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
-கௌசல்யா-
