மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க பணிப்புரை
கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 54 வயது பெண் தொழிலாளி ஒருவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றிருந்தது.
குறித்த பெண் தொழிலாளியின் நலன்புரியில் அக்கறை செலுத்தத் தவறிய நிலையில், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், குறித்த கம்பனி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.
இதன்பின்னர் குறித்த பெண்ணுக்கு மருத்துவக் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கம்பனி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு சம்பளம் வழங்குவதற்கும், இனிவரும் காலங்களில் தேயிலைக் கொழுந்து பறிப்பதில் இருந்து இலகு வேலைக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பனி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சயளிக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
- ஊடகப் பிரிவு