(UPDATE)
கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயதான மொஹமட் அஸ்வி…
இவர் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர்.
இரு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இவரே மூத்த மகன்.
முற்பகல் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 31 மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
அவ்வேளையிலேயே பக்கத்து காணியில் இருந்த மரமொன்றின் கிளை இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.
காயமடைந்த மூன்று மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றுமொரு சிறுவன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். மற்றுமொரு மாணவர் கம்பளை வைத்தியசாலையில் உள்ளார்.
……
முதலாம் இணைப்பு
மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே மரம் சரிந்து விழுந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
காயமடைந்த இரு மாணவர்களும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கம்பளை, இல்லவத்துர பகுதியை சேர்ந்த மாணவரே உயிரிழந்துள்ளார்.