மருந்துவகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா, சீனாவில் இருந்து பெற நடவடிக்கை!

நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் நன்கொடையாக 100,000 அன்டிஜன் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 110 மில்லியன் ரூபா பெறுமதியான அன்டிஜன் உபகரணங்கள் இவ்வாறு இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இதனை கையளித்தார்.

தட்டுப்பாடின்றி மருந்துகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க எதிர்பார்த்துள்ளதோடு, இதற்காக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles