மரையை வேட்டையாடிய இருவர் பொகவந்தலாவையில் கைது!

தேயிலை மலைகளில் சுற்றித் திரிந்த மரையை கொன்று, இறைச்சியாக்கிய இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் ஒருவரின் வீட்டை சோதனையிட்ட போது, அங்கிருந்து 12 கிலாகிராம் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles