அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் காணப்படும் தோட்டக் காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (03) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையக சிவில் சமூகக் கூட்டிணைவின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு முன்னால் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.
அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழுள்ள பயிரிடப்படாத காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், குறித்த காணிகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது பெருந்தோட்ட மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தினர்.
மலையக மக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும் இடித்துரைத்தனர்.










