“மஹிந்தவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது”- மொட்டு கட்சி

” மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட தரப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது என அறிக்கை வழங்கியும், அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே அதற்க பொறுப்பு கூறவேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பு நேற்று முதல் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டமையானது அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அறிக்கையொன்றை கோரி இருந்தது. 5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியால் மேற்படி குழுவுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.

13 புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டி மஹிந்த ராஜபக்சவுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றியும், அவருக்கு ஏன் பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என்பது பற்றியும் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளரால், பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பிலான குழுவுக்கு அறிக்கை அனுப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலும் உள்ளது. ஐஸ் அமைப்பு, புலிகள் அமைப்பு மற்றும் பாதாள குழுக்கள் உள்ளிட்ட தரப்புகளால் மஹிந்த ராஜபக்சவுக்குள்ள அச்சுறுத்தல் குறையவில்லை என மஹிந்தவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள அதிகாரி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி அறிக்கைகள் வழங்கப்பட்டும், அதன் உள்ளடக்கங்களை மறைத்துவிட்டு மஹிந்தவுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். போருக்கு முடிவுகட்டி, படையினரின் சடலங்கள் கிராமங்களுக்கு வருவதை தடுத்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவருக்கு ஆயிரம் பேரை பாதுகாப்புக்கு வழங்கினால்கூட அதில் தவறு இருக்காது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles