மஹிந்த ராஜபக்ச வயோதிப கட்டத்தை அடைந்துவிட்டார் என்பது உண்மை. ஆனால் அவர் இந்நாட்டுக்காக செய்த சேவைகள் வயோதிபம் அடையவில்லை. அவர் இந்நாட்டுக்காக பெரும் சேவையாற்றியுள்ளார். இது எமது நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியவரும்.
வியட்நாமுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தலைவரை அந்நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். அவரின் சடலம் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகின்றது. ஆனால் 2000 இற்கு பிறகு பிறந்த சிலர் மஹிந்த ராஜபக்சவை கிழட்டு மைனா என விமர்சித்தனர். மஹிந்தவை இவ்வாறு விமர்சித்தவர்கள் தாம் தவறிழைத்துவிட்டதாக இன்று உணர்ந்துள்ளனர். அது பற்றி எம்முடன் கதைக்கின்றனர்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.










