மாகாணசபைத் தேர்தல்: பூர்வாங்க நடவடிக்கை ஆரம்பம்!

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அமைச்சு மட்டத்திலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என்று மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“ மாகாண சபைத்தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

hகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

மாகாண சபை முறைமையில் காணப்படும் ஒருசில சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். இது தொடர்பில் சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.” – என சந்தன அபேரத்ன மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles