மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்றவர் மாத்தளையில் கைது!

மஹவெல பொலிஸ் பிரிவில் பல்லேபொல நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது மருந்தகம் ஒன்றிலிருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மருந்தகம் ஒன்றில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மாத்தளை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் குறித்த மருந்தகத்தை சுற்றி வளைத்த போது அங்கு நான்கு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 520 கிராம் போதை பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒரு மாத்திரை 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மருந்தக உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகவேல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles