மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை – நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் நீதவான் விராஜ் வீரசூரிய தண்டனையை வழங்கினார்.

கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிய இராஜரட்ணம் கேதீஸ்வரன் என்பவர் தரம் ஐந்தில் கல்வி கற்ற  மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த பகுதி நேர ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவருக்கு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இத் தொகை வழங்காவிட்டால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.

மேலும் நீதிமன்ற தண்டணை பணமாக ஐந்தாயிரம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இத்தகயை செலுத்தாவிட்டால் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

ஆ.ரமேஷ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles