மாத்தளை மாநகரசபை முதல்வராக பிரதி மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகரசபையின் முதல்வர் பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி புதிய மாநகர முதல்வரை ஒருவரை தெரிவுசெய்யும் போட்டி மத்திய மாகாண உள்ளாட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதி முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமிடையில் போட்டி நிலவியது.
இரகசிய வாக்கெடுப்பின்போது சந்தனம் பி ரகாஸ்க்கு ஆதரவாக 10 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜயசேகரவுக்கு 9 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு மேலதிக வாக்கால் பிரகாஸ் வெற்றிபெற்றுள்ளார்.
மாத்தளை மாநகரசபையின் முதல்வராக இருந்த அலுவிகார அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










