மாவீரர் தின நிகழ்வை நடத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பர்

” உறவுகளை நினைவுகூர உரிமை உள்ளது. எனினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நினைவுகூர இடமில்லை. எனவே, புலித்தலைவர்களை எவரேனும் நினைவுகூர்ந்தால் அதற்கு எதிராக பொலிஸார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ 2011 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பயங்கரவாத அமைப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி திரட்டல், ஏற்பாடுகளை செய்தல், சின்னங்களை பயன்படுத்தல், கொடிகளை பயன்படுத்தல், அமைப்பின் பாடல்களை ஒலிபரப்புதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.

எனவே, தடைசெய்யப்பட்ட அமைப்பின் சின்னம், கொடி மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்த முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது பற்றி தெளிவாக அறிவித்துள்ளார்.

எவரேனும் உயிரிழந்த தமது உறவுகளை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர்ந்தால் அதற்கு தடை விதிக்க முடியாது. உறவுகளை நினைகூரல் என்பதும், புலிகளை கட்டியெழுப்புதல் என்பதும் இருவேறுப்பட்ட விடயங்களாகும். இவ்விரு விடயங்களையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்குள்ள உரிமையை மதிக்கின்றோம். எனினும், தடைசெய்யப்பட்ட அமைப்பை நினைவுகூருவதற்கு இடமில்லை. எமது அரசியலும் அதற்கு இடமில்லை. எனவே, எவரேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். புலித்தலைவர்களை நினைகூர இடமில்லை. அவ்வாறு செய்தால் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles